A.P.J கலாம் அவர்களின் கவிதையொன்று...
இந்தியத் திருநாட்டின் இளைய குடிமகனாகிய நான் அறிவு, அன்பு, தொழில் நுட்பமென்கிற ஆயுதங்கள் தரித்திருக்கிறேன் என் தாய்நாட்டுக்காக. நான் அறிவேன்.

குறிக்கோள் சிறிதெனில் குற்றமாம் என்பதை ஒரு மகத்தான கனவுக்காக நான் உழைப்பேன், வியர்வை சிந்துவேன். வளர்ச்சியுற்ற நாடாய் இந்தியாவை மாற்றுகின்ற கனவு அது.
நூறுகோடி பேரில் நானும் ஒருவன் அந்த ஒற்றைக் கனவில் எழுச்சியுறும் ஆன்மாக்கள் நூறு கோடி அது என்னுள்ளும் நுழைந்தது நான், எந்தவொரு வளமும் ஈடாமோ? எழுச்சியுற்ற ஆன்மாவின் ஆற்றலுக்கு

நான் மண்ணிலும் மண்மீதும் மண்ணின் கீழும் அறிவென்னும் தீபத்தை அணையாது காப்பேன்
"வளர்ச்சியுற்ற இந்தியா" எனும் கனவு வந்தடைவதற்கு.
-ஏ. பி. ஜே.அப்துல் கலாம்
0 Comments
Post a Comment
Thanks for reading my site