மகளிர் பொறியியற் கல்லூரி விழாவில் நிகழ்த்திய
உரையிலிருந்து...
இதோ நான் கூறும் வார்த்தைகளைத் திரும்பக்கூறுங்கள் இவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்.
- கல்வியில் சிறப்படைய நான் நன்றாக உழைத்துப் படிப்பேன்.
- என்னைச் சுற்றியிருப்பவர்களில் பத்து பேருக்கு எழுதப் படிக்கக்கற்றுக் கொடுப்பேன்
- என் சுற்றுப்புறத்தில் போதைப்பழக்கத்துக்காளானவர் களில் குறைந்தது ஐந்துபேரையாவது அக்கொடிய பழக்கத்திலிருந்து மீட்பேன்.
- என்னுடைய வீடடிலோ அல்லது படிக்கிற இடத்திலே பத்து மரக்கன்றுகளேனும் நட்டு அவை மரமாகும் வரை பாதுகாத்து வளர்ப்பேன்.
- துன்பப்படுகிறவர்களில் சிலருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்து அவர்களுடைய முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துவேன்.
- நான் மதம், சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கு ஒருபோதும் நான் துணை போக மாட்டேன்.
- நேர்மையான வழியில் நடப்பேன், மற்றவர்களும் நேர்மையாய் நடந்து கொள்ள நான் உதவுவேன்.
- நான் நல்லவனாய் இருந்து, நற்பணிகள் செய்து என் வாழ்வையே மற்றவர்களுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழச் செய்வேன்.
- மனநோயாலும் பிற ஊனங்களாலும் துயர்ப்படும் சகோதர சகோதரிகளுக்கும் என்னாலான முயற்சிகளைச் செய்து அவர்களை அத்துயரிலிருந்து மீட்டு சாதாரண மனிதர்களாய் வாழச் செய்வேன்.
- என் தாய்த்திருநாட்டின் வெற்றியையும். என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்
0 Comments
Post a Comment
Thanks for reading my site