அன்பு (Love)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 

என்பும் உரியர் பிறர்க்கு.


அன்புக் குழந்தைகளே!

அன்புடையார் தங்கள் உடலையும் பிறருக்கு உரிமையாக்கி வாழ்வார் என்பது திருவள்ளுவர் அன்புடையாருக்குத் தந்த இலக்கணம் ஆகும்.

அப்படி உடலையும் உயிரையும் எல்லாவற்றையும் உலகிற்கே உரியதாக்கி, உலக மக்களின். குறிப்பாக இந்தியர்களின், முன்னேற்றம் என்ற ஒன்றையே கருத்தில் கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்த மகான் Swami Vivekanandar.

Vivekanandarமனிதர்களை நேசித்தார். நேசிக்கிறார். 'நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள். மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள்! என்ற அன்பின் குரல் அவருடையது.


மனிதர்களை நேசித்த மகானான சுவாமி விவேகானந்தர் 1863 January 12-இல் பொங்கல் திருநாளன்று இப்பூவுலகில் தந்தை, புவனேஸ்வரி தேவி அவரது தாய். ஆண் பிள்ளை இல்லையே என்ற அவர்களது Kolkata மாநகரத்தில் பிறந்தார். விஸ்வநாத தத்தர் அவரது ஏக்கத்தைப் போக்கவும், உலக மக்கள் அனைவரின் வாழ்வில் ஒளி ஏற்றவும் ஒரு ஞானசூரியனாகத் தோன்றினார் அவர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நரேந்திரநாத் தத்தர். சுருக்கமாக நரேன் என்று அழைக்கப்பட்டார்.

வீட்டில் உங்களுக்கு ஒரு செல்லப் பெயர் இருக்கும் அல்லவா! அதைப் போலவே நரேனுக்கும் இருந்தது. அது என்ன தெரியுமா? 'பிலே'.


அன்புள்ளம் (Beloved)


அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் நம்மிடம் அன்போடு நடந்துகொள்கிறார்கள். நாமும் பிறரிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். யாரைப்போல் என்றால் நமது பிலேயைப்போல. நாமும் அவரைப்போல் அன்புமிகுந்த உள்ளம் படைத்தவர்களாக பிறருக்கு உதவி செய்யும் இயல்புடையவர்களாக வேண்டும். வாழ வேண்டும்.

விஸ்வநாத தத்தரின் வீட்டைச் சாதுக்களும் பிச்சைக்காரர்களும் நாடுவது உண்டு. மிகுந்த தானசீலராக இருந்தார் அவர். தந்தைக்குச் சற்றும் சளைக்காத மகனாக இருந்தான் பிலே. பிச்சைக்காரர்களைப் பார்த்தால்போதும், அருகில் எது கிடைத்ததோ அப்படியே அவர்களுக்கும் கொடுத்துவிடுவான். அந்தப் பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் கவலைப்பட மாட்டான்.

இப்படி தானம் அளித்தால் தினசரி வாழ்க்கை நடத்துவது எப்படி என்று அவனது தாய் ஒருநாள் பிலேயை ஓர் அறையில் அடைத்து விட்டார். ஆனால் பிலே எள்ள செய்தான் தெரியுமா? அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியாக பிச்சைக்காரர்களைக் கூப்பிட்டு அறையிலிருந்த துணிமணிகளை அவர்களிடம் தூக்கிப் போட ஆரம்பித்தான்! பிச்சைக்காரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அவனை ஆசிர்வதித்துச் சென்றார்கள்.

மற்றவர்களின் தேவை அறிந்து சேவை செய்வது நரேனுக்கு இயல்பாக இருந்தது. மனிதர்களிடம் மட்டுமல்ல. பறவைகள், ஆடு, மாடுகள் போன்றவை மீதும் அவனுக்கு அலாதி பிரியம். 'எப்போதும் கொடுப்பவன் நிலையிலே இரு' என்பது நரேன் பிற்காலத்தில் உபதேசித்த விவேக மொழி. நரேனைப்போல் நாமும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவோம்.


அறியாமை அகற்றிடு (Remove Ignorance)


சிறு வயதிலேயே பிலே மிகுந்த புத்திசாலியாக இருந்தான். ஆறு வயதிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களிலிருந்து பல கதைகள் அவனுக்கு மனப்பாடமாகி விட்டிருந்தன. இது அவனால் எப்படி முடிந்தது ? அவனுடைய தாய் அவனை மடியில் வைத்துக்கொண்டே கதைகளையெல்லாம் படித்துச்சொல்வார். எதையாவது ஒருமுறை கேட்டால் அதை மறக்க மாட்டான் பிலே.

பிலேக்கு பாடங்களைச் சொல்லித்தர ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் கற்பிக்கும்போது பிலே கவனமாகக் கேட்பான். கேட்டவை அப்படியே அவன் மனதில் பதிந்துவிடும். இப்படிப்பட்ட ஞாபகசக்தி அவனுக்கு எப்படி உண்டாயிற்று? ஆசிரியர் கற்பிக்கும்போது பிலே வேறு எதையும் நினைக்காமல் முழு மனதையும் கேட்பதில் செலுத்துவான். இதுவே அவளது ஞாபகசக்தியின் ரகசியம்.

அது மட்டுமின்றி, கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினான் பிலே. பாரதத் திருநாட்டின் லட்சியங்களாக என்றென்றும் திகழ்கின்ற ஸ்ரீராமனும் சீதாதேவியும் அவனது விருப்பத்திற்குரிய தெய்வங்களாகத் திகழ்ந்தனர். கண்களை மூடி, அவர்களைச் சிந்தித்தபடி, அவர்களின் திருவுருவங்களின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பான் பிலே.

இப்படி கண்களை மூடி, மற்ற எதையும் சிந்திக்காமல், ஒரே பொருளை நீண்ட நேரம் சிந்திக்கச் சிந்திக்க மன ஆற்றல் வளர்கிறது. இத்தகைய ஆற்றலை இயல்பாகவே பெற்றிருந்தான் நரேன். அவனது ஞாபக சக்திக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.



மெய்ப்பொருள் காண்பது அறிவு (See Truth is  Knowledge)


விளையாட்டு என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியம்தானே! ஓடி ஒளிந்து விளையாடுவது, மரத்தின் மீதேறி போன்றவை உங்கள் அனைவருக்கும் உகந்தவை அல்லவா! இளங்கன்று பயம் அறியாது. 

மரத்தில் ஏறும்போதும். ஓடியாடும்போதும் உங்களுக்குப் பயம் எதுவும் இல்லை. ஆனால் உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள், உங்களுக்குத் தீங்கேதும் ஏற்படக் கூடாது என்பதற்காக எவ்வளவோ உங்களை எச்சரிப்பார்கள். சிலவேளைகளில் உங்களைப் பயமுறுத்தவும் செய்வார்கள் அல்லவா!

நரேனையும் பெரியவர் ஒருவர் அப்படித்தான் பயமுறுத்தினார். அவனோ அச்சம் என்பது சிறிதும் இல்லாத ஆண்மகனாகத் திகழ்ந்தான். அந்த நிகழ்ச்சியைக் காண்போமா!

நரேன் ஒருநாள் நண்பர்களுடன் ஒரு பெரிய மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான். தலைகீழாகத் தொங்கி விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. ஒரு கினையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவி குரங்குபோல் ஆடுவான் அவன்.

சிறுவர்கள் ஆர்ப்பாட்டமாக விளையாடிக் கொண்டிருந்ததை அவனது நண்பனின் தாத்தா பார்த்தார். அவருக்கு இந்தக் கலாட்டா பிடிக்கவில்லை. எனவே விளையாட்டை நிறுத்த வேண்டுமென நினைத்தார். உடனே, கூட்டத்தின் தலைவனாக விளையாடிய நரேனைக் கூப்பிட்டார்.

நண்பர்களும் அவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள். அவர் நரேனிடம், 'அப்பா தரேன்! இந்த மரத்தில் ஏறாதே. அதில் ஒரு பூதம் இருக்கிறது, அது மரத்தில் ஏறுபவரின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும். ஜாக்கிரதை!' என்று கூறி பயமுறுத்தினார். அவர் கூறியதை அமைதியாக, பணிவுடன் கேட்டுக் கொண்டான் நரேன். தாத்தா அங்கிருந்து போன மறுகணமே மீண்டும் மரத்தில் ஏற ஆரம்பித்தான்.

அதைக் கண்ட அவனது நண்பர்களுள் ஒருவன் அலறினாள். 'ஐயோ' நரேன்! பூதம் இருக்கிறது என்று நாத்தா சொன்னாரே, மரத்தில் மீண்டும் ஏறுகிறாயே. ஏறாதே!' என்று சத்தம் போட்டான். நரேன் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. யார் சொல்வதையும் கேட்காமல் மரத்தில் ஏறி விளையாட ஆரம்பித்துவிட்டான்.

பயந்த நண்பர்களிடம், 'நீங்களெல்லாம் சரியான மக்குகள், மரத்தில் உண்மையிலே பூதம் இருந்திருந்தால் நாம் இத்தனை நாட்கள் விளையாடியபோது தம்மைப் பூதம் ஒன்றும் . செய்யவில்லையே? அந்தத் தாத்தா சொன்ன கதையை நம்பிவிட்டீர்களா! அப்படி பூதம் இருந்திருந்தால் என் கழுத்து என்றோ நெரிக்கப்பட்டிருக்குமே! அப்படி ஏதும் நடக்க்கவில்லையே?' என்று கேட்டான் நரேன். 

எதையும் சோதித்துப் பார்க்காமல் ஒத்துக்கொள்ளக் கூடாது, எதிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பாடத்தை நாம் நரேனிடமிருந்து கற்றுக்கொள்வோமா!

திருவள்ளுவர்


 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

-என்றுதானே தெய்வப் புலவரும் கூறியுள்ளார்!


நீஏதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு. ஒரு முறை சன்னியாசிப் பெரியார் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் தமது கடவுள் வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எவ்வளவு கவனமும் கருத்தும் செலுத்தினாரோ,அதே அளவுக்கு ஊன்றிய கருத்தோடு தமது பித்தனைச் சமையல் பாத்திரங்களையும் தேய்த்துப் பொன்போலப் பிரகாசம் உள்ளதாகச் செய்துகொள்வார்.


    - Swami Vivekananda